Thursday, November 21, 2024
Home Sports மகளிர் பிரீமியர் லீக் கோப்பை வெல்லப் போவது டெல்லியா, பெங்களூருவா?

மகளிர் பிரீமியர் லீக் கோப்பை வெல்லப் போவது டெல்லியா, பெங்களூருவா?

by edit desk
0 comment

இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மூன்றாவது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில், இரண்டாவது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை விரட்டி முதல்முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது.

இந்நிலையில், கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைத்தானத்தில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளது.

மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் மற்றும் 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்ததுள்ளது.

அந்த அணியில் துடுப்பாட்டத்தில் மெக் லானிங் (4 அரைசதம் உள்பட 308 ஓட்டங்கள்), ஷபாலி வர்மா (265 ஓட்டங்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (235 ஓட்டங்கள்), அலிஸ் கேப்சியும் (230 ஓட்டங்கள்), பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் மரிஜானா காப் (11 விக்கெட்டுக்கள்), சுழற்பந்து வீச்சாளர்கள் ஜெஸ் ஜோசசென் (11 விக்கெட்டுக்கள்), ராதா யாதவ் (10 விக்கெட்டுக்கள்), வேகப்பந்து வீச்சாளர்கள் அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டேவும் (தலா 8 விக்கெட்டுக்கள்) என முழு அணியும் இந்த தொடரில் தமது அனைத்து திறமையினையும் வெளிகாட்டியுள்ளனர்.

ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றிகள், 4 தோல்விகள) மூன்றாவது இடம் பிடித்தது. எலிமினேட்டர் சுற்றில் 5 ஓட்டங்கள் வித்தியாத்தில் மும்பைக்கு அணிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

பெங்களூரு அணியில் துடுப்பாட்டத்தில் நடப்பு தொடரில் அதிக ஓட்டங்களை குவித்தவரான ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி (2 அரைசதத்துடன் 312 ஓட்டங்கள்) ஜொலித்து வருகிறார். அணித்தலைவியான மந்தனா (269 ஓட்டங்கள்), ரிச்சா கோஷ் (240 ஓட்டங்கள்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஆஷா சோபனா (10 விக்கெட்டுக்கள்), ஸ்ரேயங்கா பட்டீல், சோபி மோலினெக்ஸ் (தலா 9 விக்கெட்டுக்கள்) என தமது அணிக்கு வலுசேர்க்கிறார்கள்.

கிண்ணத்தினை வசப்படுத்த இரு அணிகளும் தமது முழு பலத்தினையும் இன்று பிரயோகம் செய்யும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என கிரிக்கெட் விமர்சனர்கள் தமது கருத்தினை பதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.6 கோடி பரிசாக வழங்கப்படும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.3 கோடி பரிசாக கிடைக்கும்.

Soledad is the Best Newspaper and Magazine WordPress Theme with tons of options and demos ready to import. This theme is perfect for blogs and excellent for online stores, news, magazine or review sites.

Buy Soledad now!

Edtior's Picks

Latest Articles

u00a92022u00a0Soledad.u00a0All Right Reserved. Designed and Developed byu00a0Penci Design.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.