Take a fresh look at your lifestyle.

அறிமுகம் டிமென்சிட்டி 800யு பிராசஸருடன் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன்

54
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் நிகழ்வு மூலம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஆகஸ்ட் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி வி5 ஸ்மார்ட்போனின் ரீ பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், குவாட் கேமரா சென்சார், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே டிசைன், டூயல் 5ஜி கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
 ரியல்மி 7 5ஜி
ரியல்மி 7 5ஜி சிறப்பம்சங்கள்
– 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் டிஸ்ப்ளே
– மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
– 6 ஜிபி ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 48 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– மேக்ரோ சென்சார்
– மோனோகுரோம் சென்சார்
– 16 எம்பி செல்பி கேமரா
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
– டூயல் சிம் ஸ்லாட்
– 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை GBP 279, இந்திய மதிப்பில் ரூ. 27,400 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பால்டிக் புளூ நிறத்தில் கிடைக்கிறது.