பாஜி கேம் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த கேமை உருவாக்கி வரும் என்கோர் கேம்ஸ் தனது பாஜி கேம்வெளியீட்டு விவரங்களை தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் அறிவித்து உள்ளது.
பாஜி – பியர்லெஸ் அண்ட் யுனைட்டெட் கார்ட்ஸ் என்ற விரிவாக்கம் கொண்ட கேம் நவம்பர் மாதம் வெளியாகிறது. மேலும் இந்த கேமின் 1 நிமிட டீசர் வீடியோவையும் என்கோர் கேம்ஸ் வெளியிட்டு உள்ளது. டீசரில் புதிய கேம் கிராபிக்ஸ் மற்றும் கேம்பிளே தெரியவந்துள்ளது.