Take a fresh look at your lifestyle.

பட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்

104
டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் 7 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ மற்றும் ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் சிறப்பம்சங்கள்
– 7 இன்ச் 1640×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
– ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ கிளாஸ் ஜிபியு
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைஒஎஸ் 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– டூயல் சிம்
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
– பின்புற கைரேகை சென்சார், ஏஐ ஃபேஸ் அன்லாக்
– ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் ஜடைட் மற்றும் காஸ்மிக் ஷைன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.