Take a fresh look at your lifestyle.

உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியது – இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வேகம் குறைந்தது – பயனர்கள் அவதி

110

உலக அளவில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்குப் பிறகு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களின் வேகம் கடுமையாக குறைந்ததாக அதன் பயனர்கள் பரவலாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, ஆண்ட்ராய்ட், ஆப்பிள் செல்பேசி செயலிகள் மூலம் பதிவிறக்கப்பட்ட ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சேவைகள் மூலம் பயனர்களால் தகவல்கள் பரிமாற்றத்தை மேற்கொள்ளவோ தகவல்களை பெறவோ இயலவில்லை.

இதுபோன்ற சேவைகளின் முடக்கம் அல்லது வேகத்தை கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் என்ற இணையதளத்தில் சேவை முடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாக சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் சேவையை பெற முடியவில்லை என்று முறையிட்டதாக கூறியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இது 30 ஆயிரத்தைக் கடந்தும், ஃபேஸ்புக்கில் இது 50 ஆயிரத்தை கடந்தும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று முக்கிய செயலிகளும் ஏன், எதற்காக திடீரென என்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

வாட்ஸ்அப் நிறுவனமோ, பிற சமூக ஊடக நிறுவனமோ இந்த செய்தி பதிவேற்றப்படும் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிவரை எந்த விளக்கத்தையும் தரவில்லை.

இதேவேளை ட்விட்டர் செயலியை பயன்படுத்துவோர் பலரும், வாட்ஸ்அப் செயலி, இன்ஸ்டாகிராம் செயலி, ஃபேஸ்புக் சேவை முடங்கியதை பரவலாக விமர்சித்தும் அந்த தகவலை பகிர்ந்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

#whatsappdown என்ற பெயரில் ஹேஷ்டேக்கை பதிவிட்டு ட்விட்டர் பயனர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.