Take a fresh look at your lifestyle.

வங்காளதேசத்தில் 3 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு

47
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 2,519 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3,02,147 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 54 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 082 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 1.90 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 15-வது இடத்தில் உள்ளது.