Take a fresh look at your lifestyle.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- பாகிஸ்தான் வாலிபருக்கு 3 மாதம் ஜெயில்

71

துபாயில் பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி 8 வயது மகளுடன் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது குடியிருப்பில் ஒரு பகுதியை இரும்பு வேலை செய்யும் பாகிஸ்தானை சேர்ந்த 33 வயது வாலிபருக்கு வாடகைக்கு விட்டனர். இதில் சமையலறை மட்டும் பொதுவான பகுதியாக இருந்துள்ளது. சம்பவத்தன்று 8 வயது சிறுமி உணவை எடுப்பதற்காக சமையலறைக்குள் சென்றார்.

இதை பார்த்த வாலிபர் அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தார். வாலிபர் சிறுமியை தொட்டு தகாதமுறையில் நடந்துகொண்டுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். இது குறித்து சிறுமி, அவரின் தாயாரிடம் தெரிவித்தார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் முரகாபாத் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு துபாய் கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து நேற்று கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்து கொண்ட பாகிஸ்தான் நபருக்கு 3 மாத ஜெயில் தண்டனையும், தண்டனை காலம் முடிவடைந்ததும் அவரை நாடு கடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.