பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 இலட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அத்துடன், இங்கு கொரோனாவால் இதுவரையில் 168,000 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் பிரேசில் மூன்றாம் இடத்தில் இருக்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.