அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி என்ற நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் எவருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நகர மேயர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.