Take a fresh look at your lifestyle.

அமெரிக்க – சீன தலைவர்கள் டெலிபோன் மூலம் வர்த்தக பேச்சுவார்த்தை

41
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. சீனா பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அப்படி என்றால் நாங்களும் அதிக வரி விதிப்போம் என்று சீனா பதிலுக்கு கூறி வந்தது.
இரு நாட்டிற்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் இருந்தாலும் அதை அமல்படுத்த முடியாத நிலை இருந்தது. கொரோனா வைரஸை சீனாவின் ஆய்வகத்தில் இருந்து பரவியது என்று டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இதனால் இரு நாட்டிற்கும் இடையில் கடும்மோதல் உருவாகியது.
இந்நிலையில் வர்த்தகம் தொடர்பாக முதலாம் கட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து அமெரிக்க – சீனா தலைவர்கள் தொலைபேசி மூலம்  பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.