Take a fresh look at your lifestyle.

ஓமனில் 740 பேருக்கு கொரோனா தொற்று – மேலும் 28 பேர் பலி

64

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓமன் நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதில் கடந்த 3 நாட்களில் அறிவிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 740 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓமன் நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 509 ஆக உயர்ந்துள்ளது. ஓமனில் நேற்று 526 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 912 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக 28 பேர் பலியானார்கள். இதனால், மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 637 ஆக உயர்ந்தது. தற்போது உடல்நலக்குறைவால் 149 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.