பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் போலீஸ் அதிகாரியாக இருக்கும் நபரை ராணுவத்தினர் கடத்தியதாக வதந்தி பரவியது. இதனால் போலீசாருக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் உள்நாட்டு போர் நடைபெறுகிறதோ? என்ற அச்சம் மக்களிடம் நிலவியது.
மோதலின்போது தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த மோதல் குறித்து விசாரணை நடத்தும்படி பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமர் ஜாவெத் பஜ்வா உத்தரவிட்டுள்ளார்.

இந்த மோதலில் 10 போலீசார் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக இதுகுறிதத்து அறிவிக்கப்படவில்லை.