Take a fresh look at your lifestyle.

2 கோடியே 35 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்

24
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 69 ஆயிரத்து 239 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 32 ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 23 ஆயிரம் பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 66 லட்சத்து 90 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 694 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 58,74,146
பிரேசில் – 36,05,783
இந்தியா –  30,44,940
ரஷியா – 9,56,749
தென் ஆப்பிரிக்கா – 6,09,773
பெரு – 5,94,326
மெக்சிகோ – 5,56,216
கொலம்பியா – 5,41,147
ஸ்பெயின் – 4,07,879
சிலி – 3,97,665