Take a fresh look at your lifestyle.

தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்து பலியான பலர்.

56

தென்னாப்பிரிக்க நாடான காங்கோவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் இதுவரை 50 பேர் பரிதாபமாக பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தங்க சுரங்கம் ஒன்று திடீரென்று நிலச்சரிவில் சிக்கியது.

இதில் சுரங்கத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

உள்ளூர் கிராம மக்களும் அவர்களுடன் சேர்ந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே இடிபாடுகளில் இருந்து 50 பேரை சடலமாக மீட்டுள்ளனர்.

விபத்தில் மரணமடைந்த அனைவரும் இளைஞர்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இருப்பினும் இடிபாடுகளில் சிக்கிய நபர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

முன்னதாக காங்கோவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போல் தங்க சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 16 பேரும், ஜூன் மாதம் தாமிர சுரங்கம் இடிந்து விழுந்ததில் 43 பேரும் பலியானது குறிப்பிடத்தக்கது.