Take a fresh look at your lifestyle.

அமீரகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6¼ லட்சத்தை கடந்தது

25
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 542 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் முடிவுகளில் 1,529 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 47 ஆயிரத்து 182 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரு நாளில் 1,506 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 2 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,849 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 997 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 நாட்டில் மொத்தம் 6 கோடியே 20 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.