Take a fresh look at your lifestyle.

மேலும் வங்காளதேசத்தில் 5,869 பேருக்கு கொரோனா பாதிப்பு

30

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 18 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 39 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 31-வது இடத்தில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வங்காளதேசத்தில் 5869 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.78 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 108 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 7.97 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.