Take a fresh look at your lifestyle.

துருக்கியை பின்னுக்கு தள்ளியது ரஷ்யா – புதிதாக 20393 பேருக்கு கொரோனா பாதிப்பு

27

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் துருக்கியை பின்னுக்கு தள்ளி தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 54 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 601 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 064 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 49.29 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3.47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.