Take a fresh look at your lifestyle.

ரஷ்யாவில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 53 லட்சத்தை நெருங்குகிறது

35

உலக அளவில் கொரோனா-வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,906 பேருக்கு கொரோனா-வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 52.99 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா-வைரஸ் தொற்றுக்கு மேலும் 466 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 911 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 48.61 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3.08 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.