Take a fresh look at your lifestyle.

ஈராக்கின் ஆதரவைப் பெற படைகளைத் திரும்பப் பெறும் டிரம்ப்!

25

வாஷிங்டன்: ‘ஈராக்கில் உள்ள தேவைக்கு அதிகமான அமெரிக்க படைகளை வாபஸ் பெற உள்ளோம்’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மத்திய தரைக்கடல் நாடான ஈராக்கில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. இதை ஒடுக்கும் பணியில், ஈராக் அரசோடு இணைந்து, அமெரிக்க ராணுவம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, முன்னறிவிப்பு இல்லாமல் பொது இடங்களில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை எதிர்க்க அமெரிக்க படைகள் ஈராக் அரசுக்கு உதவி வருகின்றன.

வரும் நவ., 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தி வருகிறார். இதையடுத்து, ”ஈராக்கில் உள்ள தேவைக்கு அதிகமான அமெரிக்க படைகளை வாபஸ் பெற இருக்கிறோம்,” என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ கூறுகையில், ”ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. ஈராக்கில் பயங்கரவாதம் குறைந்தால்தான் முழுமையாக அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறமுடியும்,” என்றார்.

‘சமீபத்தில் புரட்சிகர ராணுவப்படைத் தளபதி குவாசும் சுலைமானி, அமெரிக்க ராணுவ வீரர்களின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து ஈராக்கின் அண்டை நாடான ஈரான் கொதிப்படைந்தது. இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் உண்டான கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் டிரம்ப் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

இந்நிலையில் தற்போது ஈராக் உடன் நட்பு பாராட்ட விரும்பி இந்த முடிவை டிரம்ப் எடுத்துள்ளார்’ என, அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.