Take a fresh look at your lifestyle.

சற்று முன் தாக்கிய பயங்கர நிலநடுக்கம் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை

16

ஜப்பானில் சற்றுமுன் பயங்கர நிலநடுக்கம் தாக்கியதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் கிழக்குக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள Miyagi என்ற பகுதிக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில், 60 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடலின் அடியில் ஏற்படும் நிலநடுக்கம் சுனாமியை உருவாக்கும் என்பதால், அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலில் அலைகள் ஒரு மீற்றர் உயரத்திற்கு எழும்பும் என ஜப்பான் தகவல் ஒளிபரப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் Miyagi பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டது. அப்போது 15,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் யாரும் கடலின் அருகில் செல்லவேண்டாம் என்றும், கடலில் யாராவது மீன்பிடிக்கவோ குளிக்கவோ செய்துகொண்டிருந்தால் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.