Take a fresh look at your lifestyle.

ஆஸி., பத்திரிகையாளர் பணிநீக்கம்; முட்டிக்கொள்ளும் சீனா-ஆஸி.,

59

சீனாவும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.கொரோனா வைரஸ் உலகெங்கும் துவங்கிய காலகட்டத்தில் நடந்த சர்வதேச கூட்டத்தில் வூஹான் நகரில் இருந்து எவ்வாறு கொரோனா வைரஸ் உலகத்துக்கு பரவியது விசாரணையை துவக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். இதனால் சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பனிபோர் துவங்கியது.

சீனாவில் உள்ள ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஆஸ்திரேலிய தூதரகம் ஆகியவற்றுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து சீனாவிலுள்ள முக்கிய பொறுப்புக்களில் பதவி வகிக்கும் ஆஸ்திரேலியர்கள் சிலர் சீன விவகாரங்களை நோட்டம் இடுக்கின்றனர் என சீன உளவுத் துறை தெரிவித்தது. சமீபத்தில் சீன ஊடகம் ஒன்றில் பணிபுரியும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செங் லி என்ற பெண் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பனிப்போர் மேலும் அதிகரித்தது.

அவரது பதவி நீக்கத்துக்கு விளக்கம் கேட்கப்பட்டபோது சீன வெளியுறவுத்துறை செங் லீ சீனாவின் தனிப்பட்ட அரசு ரகசியங்களை ஆஸ்திரேலியாவுக்கு மறைமுகமாக தெரிவித்து வருகிறார் என தகவல் வந்ததாகக் கூறியது. இதனையடுத்து அவர் ஊடகத்துறையில் இருந்து வெளியேற்றப்பட்டார் என பதில் அளித்துள்ளது.

சீனாவில் புகழ்பெற்ற சிஜிடிஎன் தொலைக்காட்சி சேனலில் உலக தொழில் அதிபர்கள் பலரை நேர்காணல் செய்துள்ளார் லி. இவரது நிகழ்ச்சி சில நாட்களாக ஒளிபரப்பவில்லை. இதனைத் தொடர்ந்து சீனாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் இவரை தொடர்பு கொள்ள முயன்றனர். கடைசியாக கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி அதிகாரிகள் லியை தொடர்பு கொண்டனர்.இவர் சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடாதவரை சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சீனாவில் சுதந்திரமாக பணி செய்யலாம் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மட்டுமே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார் எனக் கூறியுள்ளது. கடந்த ஜனவரி 2019 அன்று பெய்ஜிங்கில் யாங் என்ஜூன் என்ற ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் இதேபோன்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.