Take a fresh look at your lifestyle.

விமானத்தில் ஏற சென்ற ஜோ பைடன் மூன்று தடவைகள் விழ சென்ற வீடியோ இணையத்தில் வைரல்

33

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதற்கு படிக்கட்டுகளில் நடந்து செல்லும் போது ஜோ பைடன் தொடர்ச்சியாக மூன்று முறை கால் தவறி விழ சென்றுள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் 78 வயதுடையவர். இவர் வெள்ளிக்கிழமை  ஜார்ஜியாவின் அட்லாண்டாவுக்கு மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து ஜெட் விமானத்தில் ஏறியபோது பலமுறை கால் தடுமாறியுள்ளார்

குறித்த சம்பவத்தில் அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளநிலையில், மீதமுள்ள படிக்கட்டுகளை ஏற சென்றுள்ளார்.

பின்னர் சிவப்பு கம்பள படிக்கட்டுகளின் முடிவிற்கு சென்று காத்திருக்கும் படைவீரர்களுக்கு அவர் ஒரு வணக்கம் செலுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றில் மிகவும் வயதான ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடன் போட்டியிட்ட டிரம்ப் ஜனாதிபதிக்கு தகுதியற்ற வயதுடைய நபர் என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.