Take a fresh look at your lifestyle.

காதல் படுத்தும் பாடு… விரும்பிய பெண் நிராகரித்ததால் 23ஆவது மாடியிலிருந்து குதித்த 11 வயது சிறுவன்

49

ரஷ்யாவில், தான் விரும்பிய பெண் வேறொருவரை விரும்பியதால் 23ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான் ஒரு 11 வயது சிறுவன்.

தான் காதலிக்கவும், பிற்காலத்தில் திருமணம் செய்யவும் விரும்பிய ஒரு பெண், வேறொரு சிறுவனை விரும்புவதாக கூறியதால் மனமுடைந்த Mazar என்ற அந்த சிறுவன், தன் பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளான்.

23 மாடியிலிருந்து அவன் குதிக்க, கீழே ட்ரக் ஒன்று நின்றதால், அவன் அந்த ட்ரக் மீது விழுந்துள்ளான்.

பல எலும்பு முறிவுகளுடன் படுகாயமடைந்த நிலையில் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அவன் சுயநினைவை இழக்கவில்லை, அவனால் பேச முடிகிறது.

Mazar மாடியிலிருந்து குதிப்பதற்கு முன், தன் பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், நீங்கள் எனக்கு கொடுத்த அருமையான இளமைப் பருவத்துக்காக நன்றி என்று கூறிவிட்டு, தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவள் வேறு யாரையாவது விரும்புவதாக தெரியவந்தால் குதித்துவிடுவதாகவும் கூறியிருந்ததாகவும் எழுதியிருக்கிறான்.