Take a fresh look at your lifestyle.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

34

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இன்று அதிகாலை கோடை மழை பெய்த நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று காலை மீண்டும் பரவலாக மழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு மேல் கடுமையான இடி, மின்னலுடன் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.

சித்திரை தொடக்கத்திலேயே பெய்த கோடை மழை சென்னை மக்களை சற்றே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.