Take a fresh look at your lifestyle.

மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் பிரசாரம்

48

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-

இன்று சனிக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கொளத்தூர் கிழக்கு பகுதியில் உள்ள காசி விஸ்வநாதன் கோவில், அன்னை சத்யா நகர், அயனாவரம் பஸ் நிலையம், ஆண்டர்சன் சாலை, ராகேவந்திரா கோவில், திருக்காகுளம் சலவை செய்யும் இடம், ரெயில்வே ரோடு, மைலப்ப தெரு, பங்காரு தெரு ஜங்‌ஷன் ஆகிய இடங்களில் மு.க. ஸ்டாலின் ஆதரவு திரட்டுகிறார்.

மேலும் பில்கிங்டன் ரோடு, வசந்த கார்டன், மதுரை தெரு ஜங்‌ஷன், பெரம்பூர் மேம்பாலம், பந்தர் கார்டன், மாதவரம் நெடுஞ்சாலை, ராமன நகர், சின்னக்குழந்தை 2-வது தெரு, மடுமா நகர் 1-வது தெரு, முகுந்த ராமானுஜம் தெரு, செயிண்ட் மேரிஸ் கல்லூரி, மாதவரம் நெடுஞ்சாலை, கமலம்மாள் கல்யாண மண்டபம், திருநாவுக்கரசு தெரு, ராகவன் தெரு, பாக்ஸன் தெரு ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.

கொளத்தூர் தொகுதி மேற்கு பகுதியான ரங்கசாயி தெரு, துலக்கணத்தம்மன் கோவில் தெரு, பல்லார்டு தெரு, ஜெகநாதன் தெரு, தாந்தோன்றி அம்மன் கோவில் தெரு, பாலவாயில் ரோடு, லோகோ ஒர்க்ஸ், ஜி.கே.எம். காலனி 1 முதல் 20-வது தெரு வரை மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.