Take a fresh look at your lifestyle.

சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

32

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும் இந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். முகாமுக்கு வருபவர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும்.

பொதுமக்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.