Take a fresh look at your lifestyle.

எனக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கப்பட்டால் முடிந்தது கதை

49

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (25) அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜனவர்தன கடும் ஆக்ரோசமாக சாட்சியம் வழங்கினார்.

நேற்று 18 ஆவது தடவையாக ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன அழைக்கப்பட்டிருந்த நிலையில், தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ச்சானக்க ரணசிங்கவும் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.

அப்போது ஏப்ரல் 4 ஆம் திகதி பெறப்பட்ட தாக்குதல் குறித்த புலனாய்வு தகவலை ஏன் ஏப்ரல் 09 திகதி நடைபெற்ற பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி நிலந்தவடம் கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஜயவர்தன, தனக்கு மேலதிகாரியாக இருந்த முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸுக்கு இந்த தகவல் குறித்து ஏற்கனவே தெரிவித்ததாகவும், பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் ஆனால் அந்த கூட்டத்தில் அதைப் பற்றி கலந்துரையாட முயற்சிக்கவில்லை என்றும் கூறினார்.

சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பேரவை கூட்டத்தின் முடிவில் தேசிய புலனாய்வுத்துறை தலைவர், ´நிலந்தா ஏன் அதை அந்தத் தாளில் வைக்கவில்லை?´ எனவும் அதனை வைக்காமையை ஏற்றுக்கொள்கிறீர்களா? எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி வினவினார்.

அதற்கு பதிலளித்த ஜயவர்தன, சிசிர மெண்டிஸ் சம்பந்தப்பட்ட கூட்டத்தின் போது இதுபோன்ற கேள்வியை கேட்கவில்லை என கூறினார். ஆனாலும் கூட்டம் ஆரம்பிக்க முன்னர் ´சேர் ஏன் அதை வைக்கவில்லை என கேட்டதாக கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னைய நாள் ஏப்ரல் 20 நண்பகல் தேசிய புலனாய்வுத் துறை தலைவரான சிசிர மெண்டிஸை அழைத்து ´சேர் இது பிரச்சினைக்குரியது. நான் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்தேன்´ என சிசிர மெண்டிஸ் தெரிவித்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா என வினவப்பட்டது.

´இல்லை. அந்த தொலைபேசி அழைப்பு 5 விநாடிகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருப்பின் நான் அப்படிச் சொல்லியிருக்க முடியும், ஆனால் அதை விட அதிகமாக பேசியதாக எனக்கு ஞாபகம். உண்டு. அதாவது ஒரு தேவாலயம் மற்றும் ஹோட்டல் உட்பட எட்டு இடங்களைத் தாக்குவார்கள் என சொன்னேன்´ என்று நிலந்த ஜயவர்தன பதிலளித்தார்.

´மன்னிக்கவும், அது போன்ற ஒரு குழுவுடன் நான் பணியாற்ற வேண்டியிருந்தது. 21 ஆம் திகதிக்கு பின்னர் உண்மையான நபர்கள் யார் என்பதை நான் கண்டுக்கொண்டேன். நான் ஏற்படுத்திய தொலைபேசி அழைப்புகளின் ஸ்கிரீன் சொட்கள் இல்லாதிருந்தால், அரச புலனாய்வு பிரிவு எதனையும் செய்யவில்லை என கூறியிருப்பர். வட்ஸ் அப் தகவல் இல்லாதிருந்திருக்குமானால் நான் இப்போது சிறையில் இருந்திருப்பேன்.

´2015 முதல் அனுப்பப்பட்ட எந்தவொரு புலனாய்வு அறிக்கையிலும் எந்தவொரு சிரேஸ்ட அதிகாரியும் மேலதிக அறிக்கைகளை கோரவில்லை. ஆனால் அப்போதைய பொலிஸ்மா அதிபர் மட்டும் இரண்டு தடவைக்கும் மேல் அறிக்கைகளை கோரினார். அதேபோல் தாக்குதலுக்கு முன்னர் அனுப்பப்பட்ட ஆவணங்கள் குறித்தும் மேலதிக விடயங்களை எவரும் கோரவில்லை. எந்தவொரு சம்பந்தப்பட்ட திணைக்களத்துக்கேனும் மேலதிக அறிக்கைகள் அனுப்பப்பட்டன என்ற சாட்சிகள் இருப்பின் நான் இப்போதே இராஜினாமா செய்ய தயார்.´

´சிலர் தாக்குதல் குறித்து முன்னறிவித்தல் விடுக்கப்பட்டாலும் அதனை அவர்கள் ஒருவருடமாக மறைத்தனர். அதை தாக்குதலுக்கு பின்னரே அனுப்பினர். சிலருருக்கு முன்கூட்டிய தகவல் கிடைத்திருந்துதும் நாட்டை விட்டு வெளியேறினர். மற்றவர்கள் வீட்டிற்குச் சென்று து{ங்கினர். சுpலர் தேவாலயங்களுக்கு தாக்குதல் நடத்தப்படுவதாக அறிந்து அங்கு செல்லவில்லை. இப்படியிருக்கும் போது ஏன் தகவலை வழங்கவில்லை என என்னிடம் கேட்கின்றனர்.´

´நான் என்னால் முடிந்ததைச் செய்தேன். நான் பாதுகாப்புச் செயலாளரிடம் சொன்னேன், தேசிய புலனாய்வுத் துறை தலைவரிடம் சொன்னேன், அப்போதைய பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தேன். அப்போதைய ஜனாதிபதியிடம் இதைப் பற்றி சொல்ல முயற்சித்தேன். தொலைப்பேசிக்கு பதில் வழங்காதுவிட்டமை என தவறு அல்ல.´

´என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். இன்றும் நன்றாக தூங்குகிறேன்.´ அவன் எவர் சாட்சியமளித்தார்.