இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் சிறைச்சாலை காவலர் ஒருவரும் மற்றும் இலங்கை விமானப் படை சிவில் அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் வெயாங்கொடை, பெம்முல்லை, கொரொஸ்ஸ மற்றும் உடுகம்பொல ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மஹர சிறைச்சாலை காவலரிடம் இருந்து பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்கு புத்தகங்கள் 10 ம் , வங்கி ATM அட்டைகள் 15 ம் மற்றும் 56 ஆயிரம் ரூபாய் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.