கடந்த 18 மாத காலப் பகுதியில் மாத்திரம் 23,745 வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த காலப் பகுதியில் 12,053 குற்றப் பத்திரிக்கைகள் நாட்டின் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.