Take a fresh look at your lifestyle.

“நான் யாரையும் பாதுகாக்கவில்லை ஐயா” – முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்

73

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி சர்வதேச புலனாய்வு பிரிவிடம் இருந்து முன்கூட்டிய அறிவிப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பல முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது கைகூடாத நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு அது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவினல் நேற்று (24) 17 ஆவது தடவையாகவும் சாட்சியமளித்த போதே அவர் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

அவரின் தொலைப்பேசி தரவுகளுக்கு அமைய பேஜெட் வீதியில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு…

ஏப்ரல் 5, 2019 காலை 7.59 க்கு 28 வினாடிகள்,

ஏப்ரல் 08, 2019 காலை 7.18 க்கு 17 வினாடிகள்,

ஏப்ரல் 9, 2019 காலை 8.02 க்கு 04 நிமிடங்கள் 14 வினாடிகள்,

ஏப்ரல் 12, 2019 காலை 8.50 க்கு 37 வினாடிகள்,

அதே நாள் இரவு 08.07 க்கு 16 வினாடிகள்,

ஏப்ரல் 13, 2019 காலை 6.27 க்கு 15 வினாடிகள்,

ஏப்ரல் 14, 2019 இரவு 9.39 க்கு 38 வினாடிகள்,

ஏப்ரல் 15, 2019 இரவு 7.47 க்கு 03 நிமிடங்கள் 19 வினாடிகள் அதேபோல் ஏப்ரல் 20, 2019 அன்று மாலை 6.16 க்கு 1 நிமிடம் 28 வினாடிகளில் அழைப்பு எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த வேளையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் அதாவது ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு எடுத்தீர்களா? என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி, நிலந்த ஜயவர்தனவிடம் வினவினார்.

அதற்கு பதிலளித்த அவர் பேஜட் வீதியில் உள்ள அப்போதைய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தவர்கள் அதாவது அங்குள்ள தொலைப்பேசியை பார்வையிடுபவர்களால் ஓரிரூ சந்தர்ப்பங்களில் மாத்திரம் அப்போதைய ஜனாதிபதியை தொலைப்பேசி மூலம் இணைப்பெடுத்து கொடுத்தாகவும் கூறினார்.

அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி மீண்டும் தொலைப்பேசி அழைப்புக்களுடன் தொடர்புடைய சிறப்பு அறிக்கையை காண்பித்து கேள்வி எழுப்பினார்.

ஏப்ரல் 4, 2019 காலை 6.50 க்கு 10 நிமிடங்கள் 40 வினாடிகள்,

ஏப்ரல் 8, 2019 காலை 8:12 க்கு 04 நிமிடங்கள்,

ஏப்ரல் 13, 2019 காலை 7.11 க்கு 09 நிமிடங்கள் 11 வினாடிகள்,

ஏப்ரல் 15, 2019 இரவு 7.52 க்கு 05 நிமிடங்கள் 06 வினாடிகள்,

மேற்குறித்த நேரங்களில் பேஜெட் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திலிருந்து தொலைப்பேசி அழைப்புகள் வந்தாகவும் ஆனால் அதை தான் தவற விட்டநிலையில் அந்த அழைப்புகள் தனக்கு வந்திருக்கலாம் எனவும் அவர் பதில் வழங்கினார்.

அப்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து ஜனாதிபதியைத் தவிர வேறு யாராவது உங்களை அழைப்பார்களா? என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஜயவர்தன, சிலர் தன்னை தொலைப்பேசியில் தொடர்புக்கொள்ள முயற்சித்து அது முடியாமல் போகும் பட்சத்தில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து தொடர்பு கொள்ள முயற்சித்ததாக தெரிவித்தார்.

ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு உளவுத்துறை மீது தடயவியல் தாக்குதலுக்குப் பின்னர் நீங்கள் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டிருந்தீர்கள் என்ற வெளிப்பாட்டின் பின்னணியில் இந்த தாக்குதல் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா என்று ஜனாதிபதி ஆணையத்தின் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதாவது ஏப்ரல் 04 அன்று வட்ஸ்அப் செய்தி மூலம் பெறப்பட்ட முதல் அறிவிப்பு குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் மேலும் அந்த தகவலை ஊர்ஜிதப்படுத்திய பின்னர் ஏப்ரல் 07 ஆம் திகதி தேசிய புலனாய்வுத் துறைக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதேபோல் கடந்த வருடம் ஏப்ரல் 15 அல்லது 16 ஆம் திகதிகளில் தேசிய பாதுகாப்பு பேரவையை கூடியிருந்தால், முன்கூட்டியே அந்த தகவல் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவிக்க முடிந்திருக்கும் எனவும் ஜயவர்தன கூறினார்.

இறுதியில் அவர் ´நான் யாரையும் பாதுகாக்கவில்லை ஐயா´ என கூறியுள்ளார்.

அப்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி, ´நீங்கள் யாரையும் பாதுகாப்பதாக நாங்கள் கூறவில்லை´ என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த ஜயவர்தன ´சிலர் அவ்வாறு கூறுவதாக´ சிரிப்போடு பதிலளித்தார்.