Take a fresh look at your lifestyle.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முதலாவது தொலைநிலை கூட்டம்

25

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முதலாவது “மெய்நிகர்” என்ற தொலைநிலை அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, அமைச்சர்கள் அனைவரும் அவர்களது காரியாலயங்களில் இருந்து காணொளி ஊடாக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி ஊடாக இடம்பெற்றுள்ளமை இதுவே முதன்முறையாகும்.