Take a fresh look at your lifestyle.

குடு ரொஷானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர் கைது

60

விளக்கமறியலில் உள்ள பிரதான குற்றவாளியபான துப்பெகி ஆராச்சிலாகே பிரசாத் ருவன் குமார எனும் குடு ரொஷான் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் வெல்லம்பிட்டிய, வெலேவத்த பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரிடம் இருந்து 5 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.