Take a fresh look at your lifestyle.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

52
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளர் பூ.பிரசாந்தனின் மீளவும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றுக்கு அழைத்துவரப்படாமல் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் தொலை காணொளி தொழில்நுட்பம் ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது பூ.பிரசாந்தனை அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், கடந்த 9 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பிரசாந்தன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.