Take a fresh look at your lifestyle.

பொடி லெசியின் தாயார் கைது

82

கொட்டாவ, பன்னிபிட்டிய பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த அருமாஹந்தி ஜனித் மதுசங்க த சில்வா எனும் பொடி லெசி என்பவரின் தாயார் போதைப்பொருள் வர்த்தக பணக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணிடம் இருந்து 51,000 ரூபா பணம், 5 தொலைபேசிகள் மற்றும் வங்கி புத்தகம் ஒன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

50 வயதுடைய தெல்வத்த பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.