Take a fresh look at your lifestyle.

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு விஜயம்

48

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  22ஆம் திகதி இன்று முற்பகல் கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

மறைந்த ராம்மாஞ்ஞ மஹா நிக்காயவின் அக்கமஹா பண்டித சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்டிக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு தலதா மாளிகைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், மறைந்த இலங்கை இராமாஞ்ஞா மகாநிக்காயவின் மஹாநாயக்கர் நாபான்ன பிரேமசிறி தேரரரின் பூதவுடல் கண்டி-குண்டசாலை பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.