Take a fresh look at your lifestyle.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுமா ஆய்வில் வெளியான தகவல்

21
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் 6 மாதங்கள் வரையில் குறித்த தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்விலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பு முயற்சியில் ஈடுபட்டு வரும் விசேட நிபுணர்கள் குழுவினால் இந்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறுகிய காலப்பகுதியில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது என்பது ஒரு “நல்ல செய்தி” என்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை சுகாதாரத் துறையின் பேராசிரியர் டேவிட் அய்ரே குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்துவிடுவதாக சமீபத்தில் ஒரு ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இருப்பினும் இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு அரிதான வாய்ப்பே உள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த ஒருவர் எவ்வளவு காலம் மீண்டும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வாழ்கிறார் என்பது தொடர்பில் இன்னும் விரிவான ஆராய்ச்சிகள் அவசியப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பத் தலைவர் மரியா வான் கிர்கோவ் தெரிவித்துள்ளார்.