அரசாங்கத்துடன் எந்த தருணத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என செய்திகள் வெளியாகி இருந்தன.
இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குகையில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.