Take a fresh look at your lifestyle.

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்திகள்.

55

இலங்கையில் நேற்று ஒருவர் கொவிட் நோயினால் உயிரிழந்த நிலையில், கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவரே கொவிட் 19 தொற்றால் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு இந்த மரணத்திற்கான காரணம் என தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 439 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 4 பேரை தவிர ஏனைய அனைவரும் நோயாளர்களுடன்; தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் பேலியகொட மற்றும் திவுலபிட்டிய இரட்டைக் கொத்தணிகளுடன் தொடர்புடைய நோயாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 936 பேர் தொடர்ந்தும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம்; 368 பேர் கொவிட் 19ல் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த நோயில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 271ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் மட்டக்குளி பகுதியில் 388 பேருக்கும், முகத்துவாரம் பகுதியில் 327 பேருக்கும், தெமட்டகொடை பகுதியில் 288 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கொட்டாஞ்சேனை மேற்கு பகுதியில் 250 பேருக்கும், புளுமெண்டல் பகுதியில் 105 பேருக்கும், கொச்சிக்கடை வடக்கு பகுதியில் 238 பேருக்கும், ஜிந்துபிட்டி பகுதியில் 255 பேருக்கும், கோட்டை பகுதியில் 191 பேருக்கும், கொம்பனி தெருவில் 230 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.