Take a fresh look at your lifestyle.

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது

30

மாத்தறை – வெலிகம பகுதியில் 100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள், காவற்துறை விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தேகநபர்களிடம் இருந்த சிற்றூர்ந்து ஒன்றும் காவற்துறை விசேட அதிரடிப்படையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில் இந்த ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் கைப்பற்றப்பட்ட ஹேரோயின் தொகை மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.