கொரோனா வைரஸ் கடந்த ஒக்டோபர் மாதம் மினுவாங்கொடையில் பரவல் ஆரம்பித்த நிலையில் பாடசாலைக்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 23ஆம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
வருகின்ற திங்கட்கிழமை (23.11.2020) முதல் பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 13 வரையான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்