Take a fresh look at your lifestyle.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே

66

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையில் இருந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே நீக்கப்பட்டிருப்பதாக, உத்தியோகப்பூர்வமாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கடிதம் ஐக்கிய மக்கள் சக்தியினால் டயானா கமகேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தீர்மானத்துக்கு புறம்பாக, 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்திருந்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.