Take a fresh look at your lifestyle.

ஜோ பைடன் வெற்றியை முதல்முறையாக அங்கீகரித்த டிரம்ப்

63

அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை முதல்முறையாக அங்கீகரித்தாலும், தேர்தலை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

தேர்தலில் மோசடி செய்தே பைடன் வென்றுள்ளார் என டுவிட்டர் பதிவு தெரிவித்துள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர் நவம்பர் மூன்று அன்று நடந்த அமெரிக்க தேர்தலை அவர் தோல்வியுற்றதை மறுத்துள்ளார்.

மேலும், தேர்தலில் முறைகேடு நடந்தது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை மீண்டும் அவர் கூறி உள்ளார்.

இந்த தேர்தலுக்கு எதிராக முக்கிய மாகாணங்களில் டிரம்ப் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், அவர் தேர்தலில் முறைகேடு நடந்தது என்பதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.

தேர்தல் மிக நேர்மையாக நடந்தது என்றும், வாக்காளர்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் எதுவும் அழிக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆனால், இதுவரை பைடனின் வெற்றியை அங்கீகரிக்காமல் இருந்த டிரம்ப் இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கைலேக் மெக்எனானி, “அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்தும் தாமே அதிபர் என்பதை நம்புகிறார்,” என்று கூறி உள்ளார்.