Take a fresh look at your lifestyle.

ஒக்டோபர் மாத்திற்கு பின் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

16
கடந்த ஒக்டோபர் 4ம் திகதிக்குப் பின்னர் நேற்று வரையில் கொழும்பு மாவட்டத்தில் 5127 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 4917 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

களுத்துறையில் 595 பேருக்கும், இரத்தினபுரியில் 107 பேருக்கும், காலியில் 118 பேருக்கும், கேகாலையில் 182 பேருக்கும், குருணாகலையில் 234 பேருக்கும், கண்டியில் 134 பேருக்கும் கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.

மேலும் மாத்தளையில் 28 பேருக்கும், அனுராதபுரத்தில் 14 பேருக்கும், அம்பாறையில் 22 பேருக்கும், மாத்தறையில் 27 பேருக்கும், திருகோணமலையில் 11 பேருக்கும், மட்டக்களப்பில் 63 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 19 பேருக்கும், இந்த காலப்பகுதியில் கொவிட் 19 தொற்றுதியாகியுள்ளது.

அத்துடன் மொனராலையில் 8 பேருக்கும், பொலன்னறுவையில் 5 பேருக்கும், கிளிநொச்சியில் 3 பேருக்கும், மன்னாரில் 10 பேருக்கும், வவுனியாவில் 14 பேருக்கும், ஹம்பாந்தோட்டையில் 29 பேருக்கும், முல்லைத்தீவில் ஒருவருக்கும், புத்தளத்தில் 59 பேருக்கும், நுவரெலியாவில் 47 பேருக்கும் பதுளையில் 31 பேருக்கம் கடந்த ஒட்டோபர் 4ம் திகதிக்குப் பின்னர் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.