Take a fresh look at your lifestyle.

விளையாட்டு வினையானது- யாழ் பருத்தித்துறை பகுதியில் சம்பவம்

41

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபர்களுடன் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து, நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம்-பருத்தித்துறை பகுதியில் பதிவாகியுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வீடொன்றுக்கு முன்னால் பிறிதொரு குழு விளையாடிக்கொண்டிருந்ததாகவும், இதனையடுத்து இது தொடர்பில் குறித்த வீட்டு உரிமையாளரால் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டு உறுப்பினர்களுடன் குறித்த குழு தகராறில் ஈடுபட்டிருந்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட ஐந்து நபர்களே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.