Take a fresh look at your lifestyle.

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான முழுமையான தகவல்கள்

20

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 537 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 217 ஆக குறைவடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படுபவர்களில், நோய் அறிகுறிகள் தென்படாதவர்கள், 14 நாட்களுக்கு பின்னர் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன் பிரதான தொற்று நோய் நிபுணர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும் போது பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்காக, நாளாந்தம் 6 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பி.சீ.ஆர் பரிசோதனையின் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபா செலவாகுவதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

நாட்டில் நேற்றைய தினம் 11 ஆயிரத்து 824 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய இதுவரையில் 5 லட்சத்து 80 ஆயிரத்த 598 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.