Take a fresh look at your lifestyle.

ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு.

41

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கபட்டுள்ள காலத்தினுள் அரச மற்றும், அரை அரச நிறுவனங்களில் அல்லது கூட்டுத்தாபனங்களில் அனுமதி பெறப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களது சேவைகளை தொடர்ந்து நடத்திச் செல்வது தொடர்பாக காவற்துறை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி குறித்த நிறுவனங்களுக்குச் செல்லும் பணியாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பயணிப்பதற்கு தமது சேவையாளர் அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையுடன் நிறுவனத்தின் பிரதானி பணிக்கு வரவழைத்துள்ள கடிதங்களை ஊரரடங்கு உத்தரவிற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.