Take a fresh look at your lifestyle.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

56

தலைமன்னார் பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வயோதிபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.

குறித்த நபர் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் இருந்து தலைமன்னாருக்கு சென்றிருந்தா நிலையில் சுய தனிமைப் படுத்தப்பட்டிருந்தாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த போது, குறித்த 72 வயதுடைவர் உயிரிழந்தமையினால், பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சீகிரியா சோதனை சாவடியின் பொறுப்பதிகாரி உபாலி கருணாரட்ன திடீரென உயிரிழந்தார்.

அவர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து நோயாளர் காவு வண்டியின் ஊடாக சீகிரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.

58 வயதாக குறித்த சோதனை சாவடியின் பொறுப்பதிகாரியின் பீ.சி.ஆர் மாதிரி பெறப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகவில்லை என பீ.சி.ஆர் முடிவுகளின் படி கண்டறியப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் மேலும் ஒரு தாதிக்கு கொவிட் 19 தொற்றுறதியாகியுள்ளது.

ஐந்தாம் இலக்க அறையில் கடமையில் ஈடுப்பட்டிருந்த தாதியே கொவிட் 19 தொற்றுக்கு ஆளானதாக தெரிவிக்கப்படுகிறது.