Take a fresh look at your lifestyle.

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்படுமா

47

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்குவது பொறுத்தமற்றதாகும் எ பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன்,மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா இல்லையா என்பது தொடர்பில் இன்றைய தினம் கிடைக்கப்பெறும் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவுள்ளது.

கிளிநொச்சிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்த ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், மேல் மாகாணத்தில் உள்ள பல இடங்களில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்படுகின்ற போது, அது தீவிர பரவலை ஏற்படுத்துமா இல்லையா என்பதை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா என தீர்மானிக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்ற மேலும் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரை 554 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.