மஹியங்கனை- மககுல்கொல்ல பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் வீட்டிலிருந்து 150 மீற்றர் தொலைவில் உள்ள வனப் பகுதியில் வைத்தே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.