நவகமுவ காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹங்வெல்ல-ஆட்டிகல பகுதியில் வசித்து வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று அதிகாலை 4.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த சந்தேக நபர் ஏற்கனவே கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்படையவர் என்பதோடு, கூரிய ஆயுதம் ஒன்றினால் பலரை தாக்கியுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.